“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்” பேரறிவாளன் தாயின் உருக்கமான பதிவு

“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்” பேரறிவாளன் தாயின் உருக்கமான பதிவு

தனது உயிர் போவதற்குள் 7 பேர் விடுதலை குறித்தான கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது பதிவை உருக்கமாக கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில் “அமைச்சரவை பரிந்துரைத்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. 29 வருட அநீதியில் உள்ள பங்கு ஒன்றுடன் முடியட்டும், என் உயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்” என உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.