தமிழகத்தில் இனி வீடு கட்டுறது ரொம்ப ஈஸி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம

தமிழகத்தில் இனி வீடு கட்டுறது ரொம்ப ஈஸி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம
தமிழகத்தில் இனி வீடு கட்டுறது ரொம்ப ஈஸி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம

தமிழகத்தில் இனி வீடு கட்ட அனுமதி பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால், குறுகிய நாட்களில் ஒப்புதல் கிடைக்கப்பெற்று உடனடியாக கட்டுமான பணிகளை துவங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 2,500 சதுரஅடி பரப்பளவிலான இடத்தில் 1,200 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டுமான இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு உடனடியாக ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, நாம் உடனடியாக கட்டுமான பணிகளை துவங்கலாம்