தென் தமிழக மாவட்டங்களுக்கு இன்று மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக மாவட்டங்களுக்கு இன்று மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை கோவை, தேனி, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை:சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழைக்கான வாய்ப்புகள் இல்லை. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கனமழையை அதிகம் பெற்ற பகுதிகள்:நேற்று அதிகபட்சமாக நீலகிரியின் தேவாலாவில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவையின் வால்பாறை பகுதியில் 6 செ.மீ மழையும், சின்னக்கல்லாறு பகுதியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரியின் நடுவட்டம், தேனியின் பெரியாறு ஆகிய பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் ஜி பஜார் மற்றும் வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லையின் செங்கோட்டை, கன்னியாகுமரியின் கீழ் கோதையாறு பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது நாகை, திருவாரூர் உள்ளது டெல்டா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.