இந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20 போட்டி ஆரம்பம்

 இந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20 போட்டி ஆரம்பம்

ஹைதராபாத்: நான்கு மாதங்களுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள இருகின்றன. இரு அணிகளும்  இடையிலான முதல் டி 20 போட்டி இன்று, ஹைதராபாத்தில்உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடரை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி  மீண்டும் ஒரு முறை எதிரணியை தாக்க தயாராக உள்ளது.

இந்த முறை மேற்கிந்திய தீவுகள்  அணி இந்திய மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. தற்போது நடைபெற உள்ள போட்டிகளில் இந்திய அணி தான் தொடரை கைப்பற்றும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஏனென்றால், தொடர் நடைபெறுவது சொந்த மண்ணில் என்பதாலும், மேலும் சமீபகாலமா இந்திய அணி தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வருகிறது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இந்திய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் எட்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஐந்து போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. 

T20 போட்டி அட்டவணை:

முதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6
2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8
3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11

டி-20 இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.

டி-20 அணி மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஹேடன் வால்ஸ்