ஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 16-ந் தேதி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. ஆனால் முதல் நாள் என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதில் போட்டோ போட்டி ஏற்படவில்லை.

குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 16-ந் தேதி வரை பெறப்படும் வேட்புமனுக்கள் மீது வரும் 17-ந் தேதி பரிசீலனை நடக்கிறது. தொடர்ந்து 19-ந் தேதி மனுக்களைத் திரும்பப்பெற காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,834 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 333 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு தெரிவித்தது.