ஜார்கண்டில் 2 போலீசாரை சுட்டுக்கொலை செய்த மாவோயிஸ்டுகள்
ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள டஸ்சாம் அருவி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த மாவோயிஸ்டுகள் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.