விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி

விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி
விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி
விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிப்பதற்காக நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. நிலவின் தென்துருவத்தில் தண்ணீர், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவை குறித்து கண்டறிய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர்.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டரும், அதில் உள்ள ரோவரும் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை 1.54 மணிக்கு சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.

 நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 2.1 கி.மீ. இருந்த போது லேண்டருடனான இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரையிறங்கியதா, இல்லை ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர்.

விஞ்ஞானிகள் இந்த நிலையில் நிலவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை நேற்று புகைப்படமாக எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பியது. இதனால் விஞ்ஞானிகளுக்கு புது தெம்பு பிறந்தது. சுற்றி வரும் ஆர்பிட்டர் பின்னர் லேண்டரின் தொடர்பை பெற முயற்சிக்கப்படும் என இஸ்ரோ சிவன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நிலவை 100 கி.மீ. தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் சுற்றுவட்ட பாதையின் தூரத்தை 50 கி.மீ. ஆக மாற்ற இஸ்ரோ முடிவு செய்துள்ளது. முயற்சி இதன் மூலம் தொடர்பை இழந்த லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்பதால் இஸ்ரோ இந்த யோசனையில் இருக்கிறது. அதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.