ISL கால்பந்து தொடர்- முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்சி..!
நேற்று இரவு நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ISL), போட்டி தொடரில் சென்னையின் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி, சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் 4 போட்டிகள் விளையாடிய சென்னையின் எப்சி மூன்றில் தோல்வி பெற்று ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் வெற்றி முனைப்புடன் இறங்கிய சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நேரு மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், புள்ளி பட்டியலில் மிகவும் பின் தங்கியிருந்த ஐதராபாத், சென்னை அணிகள் மோதின.
இதுவரை ஒரு கோல் கூட அடடிக்காததால் சென்னையின் எப்சி முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. நேற்றைய தினம் சென்னையின் எப்சி முதல் கோல் மற்றும் முதல் வெற்றியை பதிவு செய்தது. ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் இடைவெளியின் போது 0-0 என சமநிலையில் இருந்தது. அதை தொடர்ந்த இரண்டாவது பாதியில் அதே நிலையை வகித்தது. இதனால் இரு அணி பயிற்சியாளர் கோல் அடித்தாக வேண்டு என்று நிலையில் இருந்தனர்.
5 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது, மிகவும் பரபரப்பாக இருந்த இந்த கடைசி 5 நிமிடத்தில் சென்னையின் எப்சி வீரர் ஷெம்ப்ரி அபாரமாக விளையாடி கோல் அடித்தார். ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த நிமிடத்திலையே ஐதராபாத் அணியில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதனால் சென்னையின் எப்சி வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு கடைசி நிமிடங்களில் தாக்குதலைத் தொடர்ந்த சென்னை அணி வீரர் வால் கிஸ் அற்புதமாக கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றியை பெற்று குடுத்தார்.
இதனால் கடைசி இடத்தில இருந்த சென்னையின் எப்சி 4 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்தது.