தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வனத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 3,200 முட்டைகள் சேகரிக்கப்பட்டு 14 பொரிப்பகங்களில் பாதுகாக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமையன்று 114 ஆமை குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்தன.

அவைகள் பத்திரமாக கடலில் விடப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை மேலும் 420 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டு அவைகள் கடலில் விடப்பட்டன.