அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்க-எஸ்ஆர்எம், சிஎஸ்ஐஆர் ஒப்பந்தம்

அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்க-எஸ்ஆர்எம், சிஎஸ்ஐஆர் ஒப்பந்தம்

அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அதிக அளவில் உருவாக்க-எஸ்ஆர்எம், சிஎஸ்ஐஆர் ஒப்பந்தம்

வளர்ந்து வரும் கட்டிடம் மற்றும் கட்டுமான பொறியியல், நிலவியல்  பொறியியல் பணிகளுக்கு தேவையான பொறியியல் வல்லுநர்களை அதிக அளவில் உருவாக்க எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும்( SRMIST- SRM Institute of Science and Technology) மத்திய அரசின்  அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையமும் (CSIR Centre for Scientific Industrial Research) இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன.

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், நிலவியல் ஆய்வு பணிகளுக்கு அதிக அளவிலான திறன்மிகு வல்லுநர்கள் தேவைபடுகின்றனர்.இப்படி அதிக அளவிலான வல்லுநர்களை கொண்ட களஞ்சியம் உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும், மத்திய அரசின்  அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி மையமும் இணைந்துள்ளன. சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் ரூர்க்கியில் சிபிஆர்ஐ எனப்படும் மத்திய கட்டிட ஆராய்ச்சி மையம் (CBRI Central Building Research Institute Roorkee) மூலமாக ஆராய்ச்சி திட்டங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருத்தல், இரு நிறுவனங்கள் இனணந்த ஆராய்ச்சி பணிகள் ஆகியவை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இந்த இரு நிறுவனங்களும் செய்துள்ளன.அண்மையில் எஸ்ஆர்எம் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் தொழில்நுட்ப இயக்குனர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன், சிஎஸ்ஐஆர் மத்திய கட்டிய ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் எஸ்ஆர்எம் கட்டிட பொறியியல் துறை மற்றும் சிபிஆர்ஐ பேராசிரியர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர்.