போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்

போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்
போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில் போலீசார் விசாரணைக்கு வந்ததை அறிந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7-வது மாடியில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். 51-வயதை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி , மகன் , மகள் மற்றும் மனைவியின் சகோதிரியுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் குற்ற வழக்கில் ஈடுபட்டதாக அந்த குடும்பத்தின் தலைவரை போலீசார் கைது செய்ய வாரண்ட் உடன் சென்றுள்ளனர். ஜன்னல் வழியாக போலீசார் வருவதை அறிந்த அந்த குடும்பத்தினர் கதவை திறக்காமல் ஒட்டுமொத்தமாக 7-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்ய முயன்ற 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர். சிகிச்சைக்காக ஒரு நபர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.