யானை மீது ஏறி யோகா செய்தபோது தவறி விழுந்த பாபா ராம்தேவ்

யோகா குரு பாபா ராம்தேவ் மதுராவில் உள்ள ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமீபத்தில் யோகா செய்து காண்பித்தார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும் நிகழ்வின் போது, யானை அசைந்ததில் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

கீழே விழுந்த உடனே சுதாரித்து எழுந்த ராம்தேவ், விறுவிறுவென நடந்து சென்றார். இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. யானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், பாபா ராம்தேவை கேலி கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிளில் சென்றபோது பாபா ராம்தேவ் தவறி விழுந்தபோது எடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.