காவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 103-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் வரும் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணிக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள் வழங்கும் காவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’ கலை நிகழ்ச்சியும் மற்றும் மூத்த கலைஞர்களை சிறப்பித்து நினைவுப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவை அன்னை சாரதா மூவிஸ் தென்னிந்தியா மற்றும் எம்ஜிஆர் ஈவன்ட் புரமோட்டர்ஸ் சிங்கப்பூர் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். சிங்கப்பூரில் எண்; 100, அட்மிரலிட்டி சாலையில் அமைந்துள்ள மர்சிலிங் கம்யூனிட்டி கிளப்பில் (MARSILING COMMUNITY CLUB) இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் கலந்து கொள்கிறார்கள். இந்த கலைஞர்களுக்கு பாராட்டு பட்டயமும், விருதுகளும் வழங்கப்படுகின்றன.. மூத்த கலைஞர்கள் 7 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி அனுமதிக்கான டிக்கெட் கட்டணத் தொகையில் ஒரு பாகம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ,முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்கியராஜ், , நடிகைகள் லதா, ராஜஸ்ரீ, நடிகர் ராஜேஷ், இயக்குனர் கபிலன், எம்ஜிஆர் தீபன், செ.கு.தமிழரசன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ், கவிஞர் புலமைப்பித்தன், ஜாக்குவார் தங்கம் (தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்