“க்ரைம் ஃபைல்”
வின் நியூஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு குற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் நிகழ்ச்சி ‘க்ரைம் ஃபைல்’. சமூகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை அரைமணி நேரத்தில் விரிவாக பதிவு செய்கிறது இந்த நிகழ்ச்சி..மோசடிகளால் ஏமாற்றப்படும் பொதுமக்கள், கொலை, கொள்ளை சம்பவங்களின் முழு பின்னணியையும் அலசுகிறது.அதேபோல் அதிகார துஷ்பிரயோகம்,அரசு இயந்திரத்தில் நடக்கும் ஊழல் என அனைத்தையும் வெளிகொண்டு வரும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பபட்டு வருகிறது…தமிழகம் மற்றும் தேசிய அளவில் தினமும் பதிவாகும் சம்பவங்களை அன்று இரவே விரிவாக இந்த க்ரைம் ஃபைல் நிகழ்ச்சியில் காணலாம்.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராஜா.