விஜய் தேவரகொண்டாவுடன் ஒன்று சேர்ந்த சிவகார்த்திகேயன்
            தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவாரகொண்டா. தெலுங்கு மட்டுமின்றி, தென்னிந்திய பெண் ரசிகர்களிடையேயும் இவர் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார். இவர் அடுத்து நடிக்கும் தெலுங்கு படத்தின் பெயர் "ஹீரோ". இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதமே வந்து விட்டாலும் கூட, படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தை ஆனந்த் அண்ணாமலை என்பவர் இயக்குகிறார். விஜய் விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக, ரஜினி காந்த நடிப்பில் வெளியான "பேட்ட" படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் மினிமம் கியாரண்டி என்ற ரீதியில் படங்களில் நடித்து வெற்றிபெற்று வரும் விஜய் தேவரகொண்டவுக்கு, "ஹீரோ" படமும் ஒரு முக்கிய இடத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மார்ச் 13-ந் தேதி விஜய் தேவரகொண்டாவின் "ஹீரோ" படம் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தின் அறிவிப்பும் வெளியானது. அந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? "ஹீரோ" தான்.
நடிகர் சிவகார்த்திகேயனும், விஜய் தேவரகொண்டாவுடன் படத்தின் தலைப்பு மூலம் ஒன்று சேர்ந்துள்ளனர்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        