தமிழில் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் ராஷி கண்ணா
            தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது. தமிழில் டாப் ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கன்னாவே நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. ஒரு நடிகை எல்லாவிதமான கேரக்டர்களையும் உள்வாங்கி நடித்தால் ரசிகன் அந்தப்படத்தோடு சுலபமாக ஒன்றிவிடுவான். ரசிகர்களை தன் கதாபாத்திரத்தோடு ஒன்ற வைப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகை ராஷி கன்னா. அதனால் தான் திறமையோடு அழகும் சேர்ந்த அவரை சினிமாவும் சினிமா ரசிகர்களும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        