சாதனை மன்னன் நடிகர் விஜய் சேதுபதி

சாதனை மன்னன் நடிகர் விஜய் சேதுபதி

சாதனை மன்னன் நடிகர் விஜய் சேதுபதியை "சென்னை பத்திரிக்கா" பாராட்டுகிறது

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் என்று பலர் சாதனை செய்து இருக்கிறார்கள், நடிகர் விஜய் சேதுபதி அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் என்று கேட்கலாம். முன்பு சாதனை செய்தவர்கள் எல்லாம் நீண்ட கால அவகாசம் எடுத்து சாதனை செய்தவர்கள். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை, சென்ற வருடம் அவருடைய 7 படங்கள் வெளிவந்தன, இந்த வருடம் இதுவரை "பேட்ட", திருநங்கை வேடத்தில் நடித்த "சூப்பர் டிலக்ஸ்", சிந்துபாத் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான "சூப்பர் டிலக்ஸ்" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் கனடா நாட்டின் மான்ட்ரில் நகரில் நடைபெற உள்ள பேண்டசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட "சூப்பர் டிலக்ஸ்" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படம் தேர்வாகியுள்ளதாக இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் 7 படம் வெளிவந்தது மட்டுமல்லாமல், சிரஞ்சீவியின் "சைரா நரசிம்ம ரெட்டி " படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். இப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது, இவை மட்டுமல்லாமல்
"கடைசி விவசாயி", "மா மனிதன்", "லாபம்" ஆகிய படங்கள் வெளிவர தயாராக உள்ளன, இது மட்டுமல்லாமல் விஜய் சந்தர் இயக்கும் "சங்கத் தமிழன்" படம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.

இது போதாதென்று பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார், நேரம் கிடைக்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார் இவ்வளவு இருந்தும் வருடத்திற்கு குறைந்தது 6 படங்களில் நடித்து விடுகிறார். வருட கடைசியில் வரும் செய்தியில், இவ்வருடம் அதிகம் நடித்த முதல் நடிகர் என்று தொடந்து இவர் பெயர் வந்து கொண்டிருக்கிறது, இவர் கதாநாயகன் என்றில்லாமல் மாறுபட்ட வேடங்களில் நடித்த படம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வெளிவருகிறது. அதனால் இவர் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்று தருகிறது. இவ்வளவு சாதனைகள் செய்பவரை சாதனை மன்னன் என்று மனமார சென்னை பத்திரிக்கா.காம் வெகுவாக பாராட்டுகிறது.