வேந்தர் தொலைக்காட்சியின் ‘How is IT’ நிகழ்ச்சி
தமிழ் தொலைக்காட்சிகளில் நகைச்சுவைகளுக்காக 24 மணி நேர தொலைக்காட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், தேர்ந்தெடுத்த நகைச்சுவை காட்சிகளால் தனித்துவத்தை பறை சாற்றி மக்களை சிரிக்க வைத்து வருகிறது வேந்தர் தொலைக்காட்சியின் ‘How is IT’ நிகழ்ச்சி.. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 மணிக்கும் மற்றும் இரவு 8:00 மணிக்கும் வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தற்காலத்திற்கு ஏற்ப இளைஞர்களை கவரும் வகையிலும், அலுவலத்தில் வேலை முடித்து அலுத்து வருபவர்களுக்கு ஏதுவாகவும், குடும்பங்களை ஈர்க்கும் வகையிலும் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி மற்றும் யோகிபாபு போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களின் காட்சிகளை தேர்வு செய்து ஒளிபரப்படுகிறது.
இதேபோன்று சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா போன்ற திறன் மிகுந்த நடிகர்களின் சிறுவர்களை கவரக்கூடிய நகைச்சுவை காட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.