ட்ரெண்ட் மியூசிக் மற்றும் ஐ.டி.சி நிமிலே இணைந்து வழங்கும் "ஸ்டே ஹோம் சங்கீதம்" - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்!

ட்ரெண்ட் மியூசிக் மற்றும் ஐ.டி.சி நிமிலே இணைந்து வழங்கும் "ஸ்டே ஹோம் சங்கீதம்" -  தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்!

இந்த ஏப்ரல் 14, 2020, தமிழ் புத்தாண்டில், தென்னிந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஏஜென்சி – ‘ட்ரெண்ட் லவுட்’ மற்றும் அதன் பிரபல ஆடியோ லேபிள் ‘ட்ரெண்ட் மியூசிக்’ மற்றும் ஐ.டி.சி நிமிலே - வேம்பினால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான அதிரடியான கிளீனர், உடன் இணைந்து நீங்கள் வீட்டிலிருந்தே ரசிக்கத்தக்க ஒரு இசை விருந்தை வழங்குகிறது. இந்நிகழ்ச்சி, ட்ரெண்ட் மியூசிக் யூடியூப் மற்றும் ட்ரெண்ட் மியூசிக் சவுத் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகவிருப்பதால், வீட்டில் இருந்தபடியே, பாதுகாப்பாக இந்த இனிமையான இசையை அனைவரும் கேட்டு ரசிக்க முடியும்.

இந்த முயற்சி ‘ஸ்டே ஹோம் சங்கீதம்’ – என இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் பாரம்பரிய கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசையை இணைத்து பிரத்யேகமாக டிஜிட்டல் தளத்தில் வழங்குகிறது.

இது விக்கு விநாயக்ராம், டிரம்ஸ் சிவமணி, மாண்டலின் U ராஜேஷ், சக்திஸ்ரீ கோபாலன், ஸ்ரீராம், ஸ்ரீலேகா மற்றும் ராகுல் நம்பியார் போன்ற பிரபல முன்னனி இசை கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு நெடுநேர இசைநிகழ்ச்சியாகும்.

ட்ரெண்ட் மியூசிக், சுயாதீன இசை கலைஞர்கள் தங்களின் இசை ஆல்பங்களை உருவாக்குவதற்கும், விநியோகிப்பதற்கும், பாடல்களின் மூலம் பணம் ஈட்டுவதற்கும் - மாலை 4 மணிக்கு, தனது இணைய பக்கங்களில் இந்நிகழ்ச்சிக்கான தளத்தை வழங்குகிறது.

ஆதவன் இந்த 2.30 மணிநேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தண்டுக்கான கொண்டாட்டமாக இருப்பதோடு, அது பார்வையாளர்களை பிரதமர்(PM Cares) மற்றும் முதலமைச்சர்(CMPRF) நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கவும் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்கள் விபரம்: 

⦁ விக்கு விநாயக்ராம்

⦁ டிரம்ஸ் சிவமணி

⦁ ராஜேஷ் வைத்யா

⦁ மண்டோலின் U ராஜேஷ்

⦁ செல்வகணேஷ்

⦁ கடம் உமாசங்கர்

⦁ சிங்கர் அலாப் ராஜு

⦁ ரஞ்சித் கோவிந்த்

⦁ ராகுல் நம்பியார்

⦁ வேல்முருகன்

⦁ வைக்கோம் விஜயலட்சுமி

⦁ சக்திஸ்ரீ கோபாலன்

⦁ ஸ்ரீராம்&ஸ்ரீலேகா

⦁ சுவாமிநாதன் செல்வகணேஷ்

⦁ தொகுப்பாளர் ஆதவன்

இசை கலைஞர்கள் தங்கள் வீடு / ஸ்டுடியோவில் இருந்தபடியே, அவர்களுடைய சிறந்த பாடல்களை இயற்றி / மறு உருவாக்கம் செய்து / பாடி, அதை தங்கள் கைபேசியில் பதிவு செய்து, அதனை காட்சிப் படுத்துவதன் மூலம், நேர்மறையான எண்ணங்களைப் பரப்புவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும். இந்நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் நோக்கில், பங்குபெறும் கலைஞர்கள் அந்த பாடல் குறித்தோ, உருவான விதம் குறித்தோ தங்களின் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு, மகிழ்விக்க இருக்கிறார்கள். 

இந்த "ஸ்டே ஹோம் சங்கீதம்" சிறப்பு இசை நிகழ்ச்சியை, தமிழ் புத்தாண்டு தினத்தில் இசை ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு முயற்சியாகவும், மன இறுக்கத்தை போக்கும் விதமாகவும் ஐடிசி நிமிலே வழங்குகிறது. 

தேசத்தின் இறுக்கமான மனநிலைக்கு மத்தியில், நல்ல விதமாக தமிழ் புத்தாண்டை ஒளிரச் செய்வதற்கான இந்த முயற்சியைப் பற்றி பேசிய ட்ரெண்ட் லவுட் டிஜிட்டல் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சிதம்பரம் நடேசன் கூறுகையில், “இசை உற்சாகமூட்டுவதற்கும், சில நேர்மறைத் தன்மையைக் கொண்டுவருவதற்கும் சிறந்தது. அதைச் செய்ய இசையை விட சிறந்த வழி எதுவுமில்லை. தமிழகம் ஒரு இசை சார்ந்த சந்தை, கிளாசிக்கல் இசை முதல் திரைப்பட பாடல்கள் வரை, அனைத்து வகைகளும் பரவலாக நுகரப்படுகின்றன. எனவே நாங்கள் நெருக்கடியான சூழலிலும் விரைவாக செயல்பட்டு இந்த டிஜிட்டல் நிகழ்ச்சியுடன் வந்திருக்கிறோம்”.

இது குறித்துப் பேசிய லெவிஸ்டா காபியின் துணைத் தலைவர் எஸ். ஸ்ரீராம், “நாங்கள் டிரெண்ட் மியூசிக் உடனான இந்த உன்னதமான கூட்டணியில் மகிழ்ச்சியுடன் கைகோர்க்கிறோம். இது பொழுதுபோக்கு துறையில் எப்போதும் இல்லாத புதிய வரையறைகளை வடிவமைத்துள்ளது. இந்த ஊரடங்கின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தும் இந்த நேரத்தில், இசை மற்றும் காபியுடன் சிறப்பாக இந்த நாட்களை செலவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.”

முழு உலகமும் பயங்கரமான கோவிட் -19 வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தமிழ் புத்தாண்டை ஒளிரச் செய்வதற்கும், உலகத்தை வாழ்த்துவதற்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதற்கும் ‘ஸ்டே ஹோம் சங்கீதம்’ ஒரு மிகவும் தேவையான நிகழ்ச்சியாக மகிழ்ச்சியைச் சேர்க்க உள்ளது!

நிமிலே - இயற்கையான கிளீனர், லெவிஸ்டா இன்ஸ்டன்ட் காபியுடன் இணைந்து வழங்கும் ‘ஸ்டே ஹோம் சங்கீதம்’, ட்ரெண்ட் மியூசிக் யூடியூப் சேனல் மற்றும் ட்ரெண்ட் மியூசிக் சவுத் பேஸ்புக் பக்கத்தில் ஐடிசி நிமிலின் முகநூல் பக்கத்துடன் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கண்டு ரசிக்கலாம். 

இது ஐடிசி நிமிலே-ன் புதுமையான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். ஐடிசி நிமிலே பற்றி மேலும் அறிந்து கொள்ள https://www.facebook.com/NimyleOfficial/ என்ற முகநூல் பக்கத்தை அணுகவும்.