தொரட்டி சினிமா விமர்சனம்

தொரட்டி சினிமா விமர்சனம்

80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின் சகவாசத்தால் கெட்டுப்போகிறான். அவனை திருமணம் முடிக்கும் பெண் அவனை எப்படி மாற்றுகிறாள். கூடா நட்பு என்ன விளைவுகளை தருகிறது , அதன் முடிவு என்ன என்பது தான் கதை. 

அத்தி பூத்தாற்போல் தமிழ் சினிமாவில் நிகழும் அதிசயங்களில் ஒன்றாக நிகழ்ந்துள்ளது இந்த தொரட்டி. இந்த தலைமுறை சுத்தமாக அறிந்திராத வாழ்க்கை. மிக எளிமையான கதை அதைவிட ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, புதுமுகங்கள் தரும் அனுபவ நடிப்பு என இப்படம் ஒரு வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துப் போகிறது.  ஆடு கிடை போடுவது, வறண்டு போன நிலம், திண்பதற்காக திருடுபவர்கள், அம்பாசிடர் கார், என படம் நெடுகிலும் 80 களின் பின்னணியை அச்சுப்பிசகாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பெரும் உழைப்பு ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேறியிருக்கிறது. மாயன், செம்பிண்ணுவின் காதலை தமிழ் சினிமா பல காலம் சொல்லும்.