தமிழ் ராக்கர்ஸை இவர்களால் தான் ஒழிக்க முடியும் : விஷால்

தமிழ் ராக்கர்ஸை இவர்களால் தான் ஒழிக்க முடியும் : விஷால்
தமிழ் ராக்கர்ஸை இவர்களால் தான் ஒழிக்க முடியும் : விஷால்

"இளையராஜா 75" நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.