ஊழலுக்கு எதிரான குறும்படம் "செருப்படி வைத்தியம்"

ஊழலுக்கு எதிரான ஒரு குறும்படமாக "செருப்படி வைத்தியம்' உருவாகியுள்ளது. இக்குறும்படம்.

இக்குறும்படத்தை இயக்கியுள்ளவர் மலைமன்னன். ஒளிப்பதிவு சுபாஷ் அலெக்சாண்டர் . இவர் வேல்ராஜின் உதவியாளர். இசை ஜெய K தாஸ் இவர் ஏற்கெனவே 3 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர். இக்குறும்படத்தில் திரை அனுபவம் பெற்றுள்ள நடிகர்கள் கலை, தயாளன் , ருத்ரன், ஐபா ஜே ஆகியோருடன் இயக்குனரும் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் மலைமன்னன் பேசும் போது, "நாட்டில் நிகழும் ஊழல்களையும் ஒவ்வொரு ஊழலைச் செய்தவர்கள் விடுதலையாகி வெளிவருவதையும் பார்த்த ஒரு சராசரிக் குடிமகனின் சீற்றமாக இப்படம் இருக்கும்.

தெரியாமல் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தரலாம். இப்படித் தெரிந்தே ஊழல் தவறுகள் செய்பவர்களுக்குச் செருப்படி கொடுத்து அவர்களின் தன்மானத்தைக்  குலைத்தால் தான் மீண்டும் ஊழல் செய்யப் பயம் வரும் என்று போகிறது கதை.

இந்த இயக்குநர் மலைமன்னன் என்பவர் ஏற்கெனவே 4 குறும்படங்கள் இயக்கி் நான்கையும் ஒரே சமயத்தில் ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டரில் பிரிவியூ செய்தவர். "ஆரம்பமே அட்டகாசம்" படத்தில் பாடல்களை எழுதியவர். இக்குறும்பட முயற்சி ஊழலுக்கு எதிரானது. ஊழல் ஒரு பாவச் செயல்; ஊழல் ஒரு பெருங்குற்றம்; ஊழல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது இக் குறும்படம். 

15 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் பார்ப்பவருக்குள் பலமணிநேரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குநர் மலைமன்னன். இப்படத்தை ப்ரண்ட்ஸ் ஆப் ப்ரண்ட்ஸ் மற்றும் மரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.