"வெள்ளையானை" படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

"வெள்ளையானை" படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !

இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல்  இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து  இயக்கியுள்ள படம் வெள்ளையானை.

இந்த வெள்ளையானை திரைப்படத்தை "WHITE LAMB TALKIES " தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .

தற்போது இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .முழு படத்தையும் பார்த்த சந்தோஷ் நாராயணன் படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் , இன்றைய விவசாயியின் வாழ்க்கையின் மிக முக்கியமான வரலாற்றுப்பதிவு, நம் தாய் மண்ணின் இசையோடு இந்த படத்திற்கு இசையமைக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் . 

இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு ஆகியோர் நடித்துள்ளனர் .

விவசாயம் , விவசாயிகளின் வாழ்க்கையை நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு - AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் ,  ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த  விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின்  தம்பி  தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்பக்குழு :

எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவாதயாரிப்பு - S .வினோத்குமார் (WHITE LAMB TALKIES ) 
தயாரிப்பு மேற்பார்வை - SA சிவச்சந்திரன் 
கலை இயக்கம் -  ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி 

சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்

சிறப்பு ஒலிகள் - சேது

ஆடை வடிவமைப்பு - நாகு
மேக்கப் - A .சரவணகுமார் , B. ராஜா
விளம்பர வடிவமைப்புகள் - சசி & சசி
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது