படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் சாய் பல்லவி
படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் சாய் பல்லவி
பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில் நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.
பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது “பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டிவிட்டார். அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது. பாவ கதைகள் படத்தின் செட்களில் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹலோ என்று சொன்னேன். அவர் ஏற்கனவே கண்டிப்பாக இருந்தார். என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார்.
பிரகாஷ் ராஜ் உடன் பணிபுரிவதை மிகவும் ரசித்தேன். எனது மருத்துவப் படிப்பைப் பற்றி விசாரித்தார். அதைப் பயிற்சி செய்யவும் வலியுறுத்தினார்”.