கியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு - புதிய படங்களுக்கு வி.பி.எப் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், சுமார் 7 மாத இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

முன்னதாக வி.பி.எப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் ரிலீசாகாது என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்தார். இதற்கு கியூப் நிறுவனம், திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நேற்றிரவு கியூப் நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனமான யூ.எப்.ஓ, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எப் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் கியூப் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

இதையடுத்து, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எப் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக கியூப் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தீபாவளிக்கு தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கியூப் நிறுவனம் வி.பி.எப் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால், படங்களை வெளியிடுவது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இரண்டாம் குத்து, களத்தில் சந்திப்போம், மரிஜுவானா உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.