புதியதலைமுறையில் "இப்படிக்கு காலம்"புதிய நிகழ்ச்சி இந்த வாரம் முதல் அறிமுகமாகிறது

புதியதலைமுறையில்  "இப்படிக்கு காலம்"புதிய நிகழ்ச்சி இந்த வாரம் முதல் அறிமுகமாகிறது

கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களின் பதற்றம் தணித்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு தகவல்களையும், நிகழ்ச்சிகளையும் புதியதலைமுறை வழங்கிவருகிறது. அந்த வரிசையில் "இப்படிக்கு காலம்" என்கிற புதிய நிகழ்ச்சி இந்த வாரம் முதல் அறிமுகமாகிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது.

முதல் கட்டமாக உலகையே அச்சுறுத்திய தொற்று நோய்கள் இவ்வார ”இப்படிக்கு காலம்” நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆதி மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்ததில் இருந்து, ஒரு கூட்டுச் சமூகமாறி இன்றைய நகரமயமாக்கல் வரை, மனித வாழ்வை பாதித்த தொற்று நோய்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் வரிசைபடுத்தப்படுகிறது. இந் நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் கொரோனா போல உலகையே உறைய வைத்த தொற்று நோய்கள் ஏற்கனவே இருந்திருக்கின்றன என்பதை நேயர்கள் அறிந்து கொள்ள முடியும்.

அதை விட முக்கியமாக, ஒவ்வொரு முறை நோய் தாக்குதலுக்கு உள்ளானபோதும், அதிலிருந்து வெற்றிகரமாக மனித குலம் மீண்டு வந்திருக்கிறது என்பதையும் அறிந்து மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும். இப்படி வரலாற்றைச் சொல்லி மக்களுக்கு தெளிவையும், நம்பிக்கையையும் கொடுக்கும்விதமாக ”இப்படிக்கு காலம்” அமைந்திருக்கிறது. இந் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.