ஒரு தியேட்டரில் ஒரே நாளில் நடக்கும் கதை MMOF !
ஒரு தியேட்டரில் ஒரே நாளில் நடக்கும் கதை MMOF !
ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'MMOF'
இப்படத்தை என் .எஸ். சி இயக்கி இருக்கிறார்.
திருமதி அனுஸ்ரீ வழங்கும் ஆர். ஆர். ஆர் மற்றும் ஜெகதீசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகியுள்ளது. L அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக .வெளியாகி இருக்கிறது
இப்படத்தில் நாயகனாக ஜேடி. சக்கரவர்த்தியும் இவர் விஷாலின் சர்வம் மற்றும் அரிமா நம்பி படங்களில் நடித்தவர். நாயகியாக அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா , க்ராக் ஆர். பி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். அஞ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் அவலா வெங்கடேஷ். தயாரிப்பு ராஜசேகர்
மற்றும் ஜேடி காசிம்.
ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்? என்ன காரணம் ? என்பது புதிராக உள்ளது. பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. திரை அரங்கில் நடக்கும் கொலைகளுக்கும் திரையரங்கில் காட்சிப்படுத்தும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது .அது என்ன ? என்பது வரை மர்மமாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக உருவாகிறது.இதற்கான படப்பிடிப்பு முழுதும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடைபெற்றுள்ளது. படத்தில் மூன்று பாடல் காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளுக்கும் அதே திரையரங்கில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது .
ஒரு திரையரங்கில் படத்தின் கதை நடந்தாலும் காட்சிகளில் நம்மை கவரும்படி அமைந்திருக்கும்.படத்தின் கதையும் காட்சிகளும் மொழி கடந்த உணர்வைத் தருவதால் மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி அனைத்து மக்களும் பார்க்கக்கூடிய வகையில் விறுவிறுப்பாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
Movie name : MMOF
Hero : Jd chakravarthy
Heroine: akshatha
Akshithamudagal
Other artists
Sriram chandra(indian idle)
Manoj nandan
Benarji
Kirrak Rp
Chammak chandra
Techinicians
Music : Sai karthik
Dop. : Anji
Editor : avula venkatesh
Producer : Rajasekhar
& jd khasim
Director : N.S.C