’லால் சலாம்’ விமர்சனம் - - சென்னை பத்திரிக்கா சிவாஜி

’லால் சலாம்’ விமர்சனம் - - சென்னை பத்திரிக்கா சிவாஜி
’லால் சலாம்’ விமர்சனம் - - சென்னை பத்திரிக்கா சிவாஜி

’லால் சலாம்’ விமர்சனம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூரார்பாத் என்ற கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இரு அணியாக பிரிந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதில் ஒன்றை இஸ்லாம் அணியாகவும், மற்றொரு அணியை இந்து இளைஞர்கள் அணியாகவும் சித்தரித்து அவர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகள் அதில் வெற்றியும் பெருகிறார்கள். இதனால், அண்ணன், தம்பியாக பழகி வந்த அந்த கிராமத்து இஸ்லாம் மற்றும் இந்து மக்களிடையே மிகப்பெரிய மோதல் வெடித்து, பகையாளியாகும் இரு தரப்பும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் ‘லால் சலாம்’ படத்தின் மீதிக்கதை.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் என்றாலும் அவருகாக சில மாஸான காட்சிகளை வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்கள். அவரது எண்ட்ரி மற்றும் சண்டிக்காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதோடு, மத அரசியலுக்கு எதிராக அவர் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் ஜீவிதா, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பு ஓவர் டோஸ். விவேக் பிரசன்னா, மூணார் ரமேஷ், ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் நிரோஷா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே ஓரளவு தன் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி கிராமத்தையும், திருவிழாவையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கலவரக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மதத்தின் மூலம் மக்களை பிளவுப்படுத்தப் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கையாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

மத அரசியல் மற்றும் சாதி ஆதிக்கம் போன்ற விசயங்களை எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கையாண்டிருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதை கமர்ஷியலாக சொல்லி அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றுக்கொள்ளவும் வைத்திருக்கிறார்.

சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், முழுப்படமாக கமர்ஷியல் ரசிகர்களை கொண்டாட வைக்கும் இந்த ‘லால் சலாம்’ ஒற்றுமை என்ற நல்ல விசயத்தை ஒரக்க சொல்லியிருக்கிறது.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி