கொளஞ்சி சினிமா விமர்சனம்

 கொளஞ்சி சினிமா விமர்சனம்

Directed by    Dhanaram Saravanan

Cast:    Samuthirakani
Sanghavi
Rajaji
Naina Sarwar
Kirubakaran
Music Director:    Natarajan Sankaran
Cinematography:    Vijayan Munusamy
Editor:    Athiyappan Siva


ஒரு கிராமத்தில் சமுத்திரகனி மனைவி இரு மகன்களுடன், மரியாதையாக வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகன் செய்யும் சேட்டைகளால் அவரது பெயர் எப்போதும் கெடுகிறது. அதனால மூத்த மகனை எப்போதும் அதிகமாக கண்டிக்கிறார். மூத்த மகனுக்கு தந்தையை பிடிக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் மனைவியுடன் சண்டை வந்து பிரிய மூத்த மகன் அம்மாவுடனும் இளையவன் அப்பாவுடனும் இருக்கிறார்கள். மகன் தந்தையை புரிந்து கொள்கிறானா, தந்தை மகனை புரிந்து கொள்கிறாரா அந்தக் குடும்பம் சேர்கிறதா என்பதே கதை! 

சமுத்திரகனி வழக்கமான அப்பா வேடம் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். சங்கவி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்க அப்படியே இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.  கிருபாகரன், நசாத் இருவரும் தான் படத்தின் மையப் பொருள். இருவரின் வழியே தான் படம் பயணமாகிறது. மொத்தமாய் படம் சொல்ல வரும் கருத்து ஓகே!