கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சி

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சி

சங்க கால தமிழர்களின் ஆளுமைகள் தொடங்கி தற்போதைய சூழல் வரை தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த அறிஞர்களுக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சி ‘தமிழாற்றுப்படை’. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பாக தமிழாற்றுப்படை ஒளிபரப்பாகிறது. திருமூலர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன செய்தார்? ஜெயங்கொண்டார் தமிழர்களுக்கு என்ன செய்தார்? கண்ணதாசனும், ஜெயகாந்தனும் தமிழுக்கு எப்படி தொண்டாற்றினார்கள்? பெரியாரும், கலைஞரும் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆற்றிய பணி என்ன? என்பதை கவி நடையுடன் எடுத்து கூறுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வைரமுத்து குரலுக்கும், அவரது தமிழ்ப் பேச்சுக்கும் ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டின் ஆளுமைகளை பற்றி அறிய விரும்புவர்கள் நிச்சயம்‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சியை தவறவிட வேண்டாம்.