கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ‘இன்றைய சினிமா’நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது
நாள்தோறும் சினிமா பற்றிய சிறப்பு தொகுப்புகளை ‘இன்றைய சினிமா’ எனும் பெயரில் வழங்கி வருகிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி செய்திகளை முதன்மையாக கொண்டிருக்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் சினிமா பற்றிய அறிய தொகுப்புகளை வழங்குவதில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி முதன்மையான இடத்தில் இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் மாலை 5:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
தமிழ் சினிமா பற்றிய சிறப்பு தொகுப்புகள் மட்டுமில்லாமல், ஆஸ்கர் விருதுகள், ஹாலிவுட் திரைப்பட சிறப்பு தொகுப்புகள், ட்ரெண்டிங் திரைப்பட தொழிநுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என ‘இன்றைய சினிமா’ நிகழ்ச்சி தனது பரந்த பார்வையை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் மாலை 5:30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.