கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். 

கடந்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதுபற்றி நடிகர் கார்த்தி, ட்விட்டரில் கூறியதாவது:

படப்பிடிப்பு முடிந்தது. கதைக்கருவை மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டது முதல் அது எங்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னுடைய படங்களில் அதிகமாகச் செலவழிக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். கஷ்டப்பட்டு உழைத்த படக்குழுவினருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.