கொரோனாவுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதனை மறுத்த ஜாக்கிசான் நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.இந்த நேரத்தில் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனாவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும்.
இந்த நிலையில் ஜாக்கிசான் பிறந்த நாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.இதற்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பேசியதாவது.
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்து விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று நம்புகிறேன்.