’தளபதி 63’ படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா கேட்டார் ஷாருக்கான்?

’தளபதி 63’ படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா கேட்டார் ஷாருக்கான்?

அட்லீ கூட்டணியில் நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாருக்கான்விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். அப்படினால் அவரது 15 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது.