பிரபல இயக்குனர் மீது பாடகி பரபரப்பு புகார்
            பிரபல பாடகியான பிரணவி பிரபல இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவர் 2016–ல் ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது " நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் படுக்கைக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’’.
இவ்வாறு பாடகி பிரணவி கூறினார்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        