மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி கூட்டணி !

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி , மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான  பாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்த்த நடிகர் நரேன் இப்படத்தில் மீண்டும் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். AAAR Productions தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போதைக்கு “Production No 1” தலைப்பிடப்பட்டுள்ளது. டிராமா திரில்லர்  வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். 

AAAR Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கூறியதாவது...

தமிழ் திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களளை தயாரிப்போம்.  குறிப்பாக புத்தம் புது ஐடியாக்களுடன் போராடும்  புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இயக்குநர் ஸாக்  ஹாரிஸ் லண்டனில் மிக உயர்ந்த கல்லூரியில், திரைப்பட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு திறன் மிகு கலைஞர்களுடன் வேலை செய்துள்ளார். இத்திரைப்படத்தை மிக தரமான படைப்பாக உருவாக்குவார் எனும் நம்பிக்கை உள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்திறமையால் பாராட்டு பெற்றிருக்கும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஆகியோர் எங்கள் படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. ஏற்கனவே அவர்கள் தமிழ் சினிமாவில், மிக தரமான படங்களில், வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்து, பெரிய அளவில் பாராட்டு  பெற்றுள்ளார்கள்.   மேலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி இருவருரின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது. நடிகர் கதிர் இப்படத்திற்கு பிறகு மிகப்பெரும் உயரத்திற்கு செல்வார். தமிழின் பிரபல கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன், இப்படத்திற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 2021 வருட தொடக்கத்தில் படத்தை துவக்கி, 2021 கோடை காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படம் சென்னை மற்றும் கேரள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. 

இப்படத்தினை AAAR Productions சார்பில் திரு லவன் பிரகாசன் மற்றும் திரு குசன் பிரகாசன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

@am_kathir & @anandhiactress reunite after the grand success of iconic movie PariyerumPerumal. After the outstanding performance in Kaithi, @itsNarain also joins the team.
@ZacHarriss is all set with his debut Movie will be produced by @Aaarproductions @DoneChannel1
#Kathirnext