"ஹீரோ" படத்தின் விறுவிறுப்பான மேக்கிங் வீடியோ!
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க பாலிவுட் ஹீரோ அபாய் தியோல் வில்லன் ரோலில் நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் விறுவிறுப்பான மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. இதனை கண்ட எஸ். கே ரசிகர்கள் அனைவரும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.