பிகில் கிளைமேக்ஸ் இதுதான்- வெளியான தகவல்

பிகில் கிளைமேக்ஸ் இதுதான்- வெளியான தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மீது பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் ட்ரைலர் என அனைத்தும் செம்ம ஹிட் அடித்தது.

இந்த நிலையில் பிகில் படத்தில் பணியாற்றிய எடிட்டர் ரூபன், இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் 'பிகில் கிளைமேக்ஸ் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும், கால்பந்து போட்டி பைனல் மேட்ச் தான் கிளைமேக்ஸ்.

எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட, பார்ப்பவர்களுக்கு தான் அதிக பதட்டம் இருக்கும், அப்படித்தான் இதிலும். மிகவும் ஆர்பாட்டம் இல்லாமல், எல்லோருக்கும் பிடித்த கிளைமேக்ஸாக இவை இருக்கும்' என கூறியுள்ளார்.