6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்

6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ் தெலுங்கு இந்தி மலையாள நடிகர் கள் பலர் உதவி வருகிறார்கள் .வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் திரட்டும் கொரோனா தடுப்பு நிவாரண நிதி க்கும் பணத்தை அள்ளி வழங்குகிறார்கள் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தங்க ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன் வந்துள்ளார்.

நடிகர் சோனுசூட் தமிழில் மஞ்னு, ஒஸ்தி ,சந்திரமுகி தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.