மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா

மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா

ஒட்டு மொத்த கோவில் பணியாளர்களுக்கும் பரிசோதனை.மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவர் வெளிநாடு சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. வெளியூர் சென்றதை மறைத்ததால் அவரது மனைவி மற்றும் பணியாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வரை சம்பந்தப்பட்டவர் கோவில் பூஜையில் பங்கேற்று உள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அனைத்து பக்தர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 54 போலீசார் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கோவில் உள்ளே முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது.