மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை எழும்பூரில் இ-சேவைகள் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்!

பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் பாராட்டு!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் இ-சேவைகள், இலவச கண் பரிசோதனை, கடனுதவி ஆலோசனை மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாநில துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர்  திரு. ராமச்சந்திரன்,  வட்டச் செயலாளர் திரு. வின்சென்ட் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L. அவர்கள் வருகை புரிந்து, முகாம் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். 

முகாமுக்கு ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகளையும், உதவிய ஆட்டோ ஓட்டுநரையும் வெகுவாகப் பாராட்டியதுடன், அவர்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். 

மேலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்திக் கொண்டிருந்த தன்னார்வலர்களைப் பாராட்டி, அவர்களது மக்கள் சேவைக்கு நன்றி தெரிவித்தார். அங்கிருந்த பயனாளிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர் திரு. K. சீனிவாசன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஸ்வரி,  இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், நகரச் செயலாளர்கள் திரு. ராமச்சந்திரன், திரு. கமல், வட்டச்  செயலாளர்கள் திரு. கருணா, திரு. லாரன்ஸ்,  திரு. சித்திக்,  திருமதி. சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர்கள் திரு. முருகதாஸ், திரு. சுரேஷ், திரு. பாலா, திருமதி. அனிதா, திருமதி. சுகன்யா, திருமதி. ஜோஸ்பின் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

https://x.com/maiamofficial/status/1904142915825516624

https://www.facebook.com/share/p/1D5BQYiuTD/

https://www.instagram.com/p/DHlN3AJJs7h/?utm_source=ig_web_copy_link