சென்னையில் 500ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் 500ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஒட்டுமொத்தமாக சென்னையில் நோய்த்தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 52% ஆக உயர்வு.தமிழகத்தில் பலி எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது! மொத்த பாதிப்பு 1821 ஆக அதிகரிப்பு.இன்று ஒரே நாளில் 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்! இதுவரை மொத்தம் 960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.