உள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கில் மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என்று மதியம் 2 மணிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.