எண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்

எண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்

பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் ஆரம்கோ மற்றும் அபுதாபியின் அட்நாக் நிறுவனங்களுடன் இணைந்து, மகாராஷ்டிராவில் 44 பில்லியன் டாலர் மதிப்பில் மெகா சுத்திகரிப்பு வளாகத்தை அமைப்பது தொடர்பான பணிகள் சரியான பாதையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அபுதாபியில் நடைபெறும் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசுகையில், இந்தியாவில் எரிபொருள் சில்லரை விற்பனை சந்தையானது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது முதலீட்டாளர்களிடம் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய எரிசக்தித் துறையில் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்ய முன்வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டின் மூன்றாவது பெரிய எரிபொருள் விற்பனையாளர் மற்றும் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான பிபிசிஎல் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் எச்பிசிஎல் நிறுவனத்தை முழுமையாக விற்பனை செய்ய ஓஎன்ஜிசி நிறுவனத்திற்குசுதந்திரம்அளிக்கவும்மத்தியஅரசுமுடிவுசெய்துள்ளது.ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த எண்ணெய் நிறுவனத்தை உருவாக்கும் விதமாக மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் எச்பிசிஎல் நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகள் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.