மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் 3 வயது குழந்தை உயிரிழப்பு: இருவர் கைது
சென்னை: கொருக்குபேட்டையைச் சோந்தவா் கோபால். இவா் தன் மகன் அபினேஷ்வா்(3) உடன், பைக்கில் சென்ற போது, திருவொற்றியூா் அருகே, மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தில் சிக்கியது.இதில், படுகாயம் அடைந்த குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கண்ணாடி துகள்கள் கலந்த 'மாஞ்சா' நூலை பயன்படுத்தக்கூடாது என, பலமுறை போலீஸார் எச்சரித்துள்ள போதும், சிலரின் அலட்சியத்தால், இன்று குழந்தையின் உயிா் பறிபோயுள்ளது.
இதுகுறித்த விசாரணையின் பேரில், இதற்கு காரணமான சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், பல்வேறு இடங்களில் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.