தீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக சென்னையில் இருந்து, நெல்லை, நாகர்கோவில், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்களான வெள்ளி , சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் காரணத்தால், ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது.காத்திருப்போர் பட்டியலும் கிட்டத்தட்ட பல ரயில்களில் 300ஐ தாண்டி உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.