கைவினை பொருள் கண்காட்சி: தலைவர்கள் பார்வை

கைவினை பொருள் கண்காட்சி: தலைவர்கள் பார்வை
கைவினை பொருள் கண்காட்சி: தலைவர்கள் பார்வை
கைவினை பொருள் கண்காட்சி: தலைவர்கள் பார்வை
கைவினை பொருள் கண்காட்சி: தலைவர்கள் பார்வை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்த கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் செய்முறைகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பார்வையிட்டனர்.அங்கு இரு தலைவர்களும் தனித்தனியாகவும், இரு நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள் கண்காட்சி, வெண்கல பொருட்கள், சிற்பங்கள், குத்துவிளக்குகள் குறித்து, ஜின்பிங்கிற்கு விளக்கி கூறினார்.

தொடர்ந்து பட்டு தயாரிக்கும் தறியை பார்வையிட்டனர். தறியின் செயல்பாடுகள் குறித்து மோடி விளக்கினார்.கோவை சிறுமுகையில் , மோடி, ஜின்பிங் உருவம் பொறித்த பட்டு சால்வை தயாரிக்கப்பட்டு ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஜின்பிங்கிடம் காண்பித்த மோடி, பட்டு சேலை ஒன்றையும் பரிசாக கொடுத்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் ஓவியங்களையம் இருவரும் பார்வையிட்டனர்.