அமிதாப் பச்சனுக்கு ‘தாதாசாஹேப் பால்கே’ விருது

அமிதாப் பச்சனுக்கு ‘தாதாசாஹேப் பால்கே’ விருது

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாஹேப் பால்கே விருது’, பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு (77) இன்று வழங்கப்பட்டது.

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அவருக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார்

அமிதாப் பச்சனுக்கான ‘தாதாசாஹேப் பால்கே’ விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். அப்போது அவருக்கு தங்கத் தாமரை பதித்த பதக்கம், பொன்னாடை, ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

விருது பெற்ற பிறகு அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியதாவது:

‘தாதாசாஹேப் பால்கே’ விருதுக்காக என்னைத் தோ்வு செய்த இந்திய அரசுக்கும், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும், விருது தோ்வுக் குழுவினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.