வின் நியூஸ் தொலைக்காட்சியில் “சகாப்தம்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

வின் நியூஸ் தொலைக்காட்சியில் “சகாப்தம்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் வாழ்க்கை வரலாற்றை காவியமாக சொல்லும் வகையிலும் மலரும் நினைவுகளாக வின் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 9:00மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “சகாப்தம்”.

இந்த நிகழ்ச்சி மலரும் நினைவுகளை நினைவு கூறும் வகையில் இருந்தாலும் சற்று வித்யாசமாக மறைந்த தமிழக முதல்வர் அவருடன் உடன் பயணித்தவர்கள் அவர் கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு பெற்றவர்கள் அவரை நேரில் சந்தித்து பழகியவர்கள் எம்ஜிஆரால் பலனடைந்தவர்கள் , வள்ளல் தன்மை, என பல்வேறு தரப்பினரையும் நேரில் சென்று எம்ஜிஆருடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் நிகழ்ச்சியை சகாப்தம் ஆகும்.

இந்த தொடரில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது மாநில மாணவரணி செயலாளர் செயலாளராக இருந்த யாகத் அலிகான் என்பவருடன் எம்ஜிஆரின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது

இதில் எம்ஜிஆர் சினிமா துறையில் எப்படி எல்லாம் சாதித்தார் என்றும், அவர் அன்றே அரசியலில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியது குறித்தும் இன்றும் எம்ஜிஆர் அவர்கள் வாக்கு வங்கியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறித்தும் விவரிக்கப்படுகிறது..

அதேபோல திமுகவில் எம்ஜிஆர் பயணித்தது அதிமுகவை தொடங்கியது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆசான் அண்ணா ஆகியோருடன் எம்ஜிஆருக்கு உள்ள பழக்கவழக்கங்களும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப் படுகிறது இந்த நிகழ்ச்சியை உள்ளிட்டு பிரிவு  ஆசிரியர் விஎம் சுப்பையா நேர்காணல் செய்கிறார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும்  காலை 9:00மணிக்கு வின் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .