கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் தில்லு முல்லு நிகழ்ச்சி புதிய நேரத்தில்..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று  வரும் தில்லு முல்லு நிகழ்ச்சி புதிய நேரத்தில்..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று  வரும் தில்லு முல்லு நிகழ்ச்சி, பிப்ரவரி 17-ந் தேதி முதல் இரவு 7 :00மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்களான முல்லை, கோதண்டம், கூல் சுரேஷ், சிங்கப்பூர் தீபன், பழனி பட்டாளம் மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட பலரும் தங்களது துள்ளலான காமெடிகளால் வயிரை பதம்பார்த்து வருகின்றனர்.

இதேபோல், அமித் பார்கவ் தொகுத்து வழங்க, குற்ற பின்னணியை அலசும் கண்ணாடி நிகழ்ச்சி, திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் நேர்கொண்ட பார்வை என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.